Friday, March 25, 2016

மனிதன்........மதம்.........மரணம்

மனிதன்........மதம்.........மரணம் எங்கே தோன்றியது மதம்? கடவுள் நம்பிக்கையிலிருந்து பிறந்தது.எதற்காக கடவுளை நம்பினான்? ?? ஒரே காரணம் பயம்.ஏன் பயந்தான்??பழத்தை உண்டு நாடோடியாக சுற்றியபோது இருட்டைகண்டும்,இடி மின்னலை கண்டும் பயந்தான்.விலங்கை கண்டு பயந்திருக்க வாய்ப்பு குறைவு. காரணம் நாடோடியாக சுற்றியபோது இவனும் ஒரு விலங்கே. கடவுளைப்பற்றிய நாடோடிகளின் பார்வை :
நாகரீக வளர்ச்சியில் நெருப்பின் கண்டுபிடிப்பு மிக முக்கியமான ஒன்று.
நெருப்பின் கண்டுபிடிப்பிற்கு பிறகு இருளை பற்றிய பயம் குறைந்தது.
ஆற்றங்கரை ஓரம் அவனுக்கு தேவையான உணவு கிடைத்தது. சக்கரம் கண்டுபிடிப்பும் மிக சிறந்த ஒன்றாகும்.
தன்னுடைய குழுவுடன் ஆற்றங்கரையில் வாழ்ந்தான்.
அக்குழுவில் வலிமையானவன் அதன் தலைவனாக செயல்பட்டு வருகின்ற ஆபத்தை எதிர்கொண்டு குழுவை வழிநடத்தி சென்றான். இக்காலகட்டத்தில் அவனுடைய வழிபாடு என்பது இயற்கை மட்டுமே.அவனுடைய பயம் என்பது இயற்கையின் இடி,மின்னல் போன்றவையே.காலமாற்றத்தில் தலைவன் ஆலோசனை கூறுபவனாகவும் அவன் குழுவில் உள்ளவர்கள் அதனை செயல்படுதுபவர்களகவும் இருந்தனர். தலைவனுக்கு இருந்த இடத்திலேயே சகலமும் கிடைத்தது. இந்தியாவை பொறுத்தவரை இந்த நிகழ்வு ஆற்றங்கரை ஓராமாக குறிப்பாக சிந்து நதி கரையில் இருந்தது. சிந்து நதியிலேயே  இருந்த காரணத்தால் அவனுடைய செயல்பாடு என்பது உழவு,வேட்டையாடுதல்,இனவிருத்தி  தண்டி வேறு ஒன்றும் யோசிக்காத நிலையில் இருந்தான். இதே கால கட்டத்தில் நைல் நதிகரைஒரம் இருந்த நாடோடி குழு தனது பயணத்தை மேற்கொண்டதுஇவர்களின் முக்கிய தொழில் ஆடு மாடு மேய்தல். பருவ மாற்றம்  காரணமாக தங்கள் வளர்த்த ஆடு மாடுகளுக்கு உணவு வேண்டியும் இவர்கள் உலகின் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு நோக்கிய பயணம் மேற்கொண்டனர்.பயணம் மேற்கொண்ட நடோடிகூட்டம் இயற்கையை ஆராய்ந்தது. இந்தியாவின் சிந்து பகுதியில் இருந்தவர்களை விட இவர்கள் இயற்கையை பற்றிய அறிவுடன் இருந்தனர்.(.கா) இடி,மின்னலின் போது உயரமான இடத்தில நிற்க கூடாது போன்றவை. இவ்வாறு ஆடு மாடு மேய்த்து கொண்டு இந்தியாவிற்குள் வந்தவர்களே ஆரியர்கள்(பிராமணர்கள்) என்று அழைகபட்டனர்.
 ஆரியர்களின் செயலும், சிந்து (இந்திய) நாடோடிகளின் வியப்பும்:!!!!!!
ஆரியர்களின் இயற்கை பற்றிய அறிவு இந்திய நாடோடிகளுக்கு வியப்பை ஏற்படுத்த செய்தது.
குறிப்பாக இடி,மின்னலின் (சிந்து நாடோடிகளின் முக்கியமான பயம் )போது உயரமான இடத்தில நிற்க கூடாது.......... பருவ காலங்களில் தகுந்த உடையணிதல். ஆகவே ஆரியர்கள் தங்கள் பயத்தை தீர்க்க கூடியவர்கள் என்ற எண்ணம் சிந்து பகுதியினரிடேயே  வந்தது.
 ஆரியர்களிடம்(பிராமணரிடம் )அடிமைபடுதல் :::
சிந்து பகுதினரின் பயத்தை போக்கியதால் ஆரியர்களை உயர்ந்தவர்களாக கருத தொடங்கினர்.
வடக்கிலிருந்து வந்த ஆரியர்கள் இங்கிருன்தொருக்கு ஆலோசனை கூறும்(பயத்தை போக்கும்) தலைவனாக மாறினார்கள் .
மேலும் அவர்களது ஆடு மாடுகளை பராமரிக்கவும் ஆரியர்களது தேவைகளையும் இங்கிறந்த சிந்து மக்கள் செய்துகொடுத்தனர். நாகரிகம் சிறிது வளர்ச்சி பெற்ற காலத்தில் ஆரியர்கள் தான் இருந்த இடத்திலேயே தனக்கு தேவையான உணவு அவர்களது அடிப்படை வசதிகளை பெற்றனர். சிந்து பகுதியில் இருந்த மக்களுக்கு சற்று பயம் குறைந்தாலும் தங்களுடைய சுகபோக வாழ்கைக்கு ஆபத்து என்று உணர்ந்த ஆரியர்கள் அவர்களது பயத்தை போக்குவது போல் அவர்களை அடிமைபடுத்த தொடங்கினர். இக்காலகட்டதில் தோன்றியவை தான்  மாயஜால,மந்திர கதைகள் . இக்கதைகளை கேட்டு பயந்த மக்களுக்கு ஆறுதல் கூறுவது போல் ஆரியர்கள் தங்கள் வாழ்கையை மேற்கொண்டனர். இவர்களது மிகபெரிய மூலதனம் மற்றவர்களின் பயமே. இவர்களே பிற்காலத்தில் பிராமணன் என்று அழைகபட்டனர்.தற்காலத்தில் சமுகத்தில் இவர்கள் உயர்நிலையில் இருக்க அடிப்படை காரணம் இதுவாகும்
 சிந்து பகுதியின் தலைவனாக விளங்கியவன் அவனது மக்களுக்கும் ஆரியர்களுக்கும் ஆரியர்களது ஆடு மாட்டிற்கும்  காவலாக இருந்தான். இவன் பிற்காலத்தில் சத்ரியன் என அழைக்கப்பட்டான்.
ஆரியர்களுக்கு தேவையான உணவு இன்னபிற சேவைகள் போன்றவற்றை மேற்கொண்டோர்,இவர்கள் பிற்காலத்தில் வைசியன் என அழைகப்பட்டார்கள்.
ஆரியர்களது ஆடு மாடுகளை மேய்த்தவர்கள்,சமுகத்தின் கீழ்நிலை வேலைகளை செய்தோர்கள் . பிற்காலத்தில்  சூத்திரன் என அழைக்கப்பட்டனர்.
இப்பிரிவினை முறையானது உடனடியாக நிகழந்திருக்க  வாய்ப்பில்லை. குறைந்தது 4000 வருடங்களேனும் படி படியாக நடைபெற்றதால் தான்  இன்றும் நாம் நினைத்தவுடன் நமது பாகுபாட்டை களைய முடியவில்லை.
    வேத காலத்தின் மதம்,கடவுள் வளர்ச்சி:
 இக்காலகட்டத்தில் தான் வருணாசிரம முறை தோன்றியிருக்கலாம். இதே கால கட்டத்தில் நைல் நதியோரம் இருந்த குழுக்களும் நன்கு வளர்ச்சி அடைந்தது.அங்கிருந்த மக்களும் தங்களது பயத்தை கடவுள் கொண்டு மறைத்தனர். ஆக இயற்கையை கண்டு பயந்தவனை கடவுளை கண்டு பயப்பட செய்த பெருமை ஆரியரை சேரும்.
இயற்கையின் மீது இருந்த பயத்தை மறந்த மனிதனது பயத்தை இது நல்லது , இது கேட்டது என கொள்கைகள் கொண்டு பயமுறுத்தினர்.மன்னன் என்ற நிலையில் இருந்த தலைவனுக்கு நல்லது கெட்டது என்ற ஆலோசனை கூறும் இடத்தில இருந்தவர்கள் பிராமணர்கள். அவர்கள் இயற்றிய சட்டங்கள் தான் இன்றளவும் நாம் கடைபிடிக்கும் நல்லது,கெட்டது போன்றவை.. தாங்கள் இருந்த இடத்திற்கு ஏற்ப அவர்களது சட்ட திட்டங்களும் மாற்றம் கொண்டிருந்தது. உயர்நிலையில் இருந்தவர்களால் உருவாக்கப்பட்டது தான் சாதி, எதற்காக உருவாக்கப்பட்டது கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே பூசாரி போன்ற ஒருவர்.சட்டத்தை உருவாக்கியவர்களின் மூலதனமே இந்த உருவ வழிபாடு. இயற்கையை கண்டு பயம் தெளிந்தவனுக்கு  புதிய பயத்தை உருவாக்கி வெற்றிகண்டதுடன் இன்றளவும் கோலோச்சி இருப்பது "தப்பு செஞ்ச சாமி கண்ண குத்தும்" என்ற சொல். தப்பு செய்தவன் தண்டனையிலிருந்து தப்பிக்க உருவாக்கப்பட்டவை தான் இந்த பரிகாரம், பலியிடுதல் வேண்டுதல் நிறைவேற்றம்  போன்றவை. இவற்றில் எது தவறு எது சரி என்ன பரிகாரம் மேற்கொள்ளவேண்டும் என்பதையெல்லாம் வரையறுத்தது சமூகதின் உயர்குடி என்று சொல்லபட்டவார்கள்தாம். 2000 ஆண்டுகளாக நாம் எப்படி வாழவேண்டும் என்று நம்மை ஆட்டுவிப்பது அவர்கள்தாம்.முழுவதுமாக இந்த முறையை எதிர்த்தவர்கள் தங்களுடைய வசதிக்கும் நன்மைக்கும் தோற்றுவித்தது  தான் மற்ற மதங்கள்.இன்றளவும் மதம் என்ற ஒன்றை அறிந்திராதவர்கள் யார் என்று பார்த்தால் உலக தொடர்பு அட்டர அமேசான் போன்ற காடுகளில் வாழும் காட்டுவாசிகள் மட்டுமே. அவர்களை நோக்கினாளல் அவர்கள் இயற்கைக்கு பயந்தவர்களாகவும் அன்றாடம்  நிறைவான வாழ்கையை மேற்கொள்ளுபவர்ளாகவும் இரூப்பர்.
 பெரியாரும் கடவுளும்.
20ம் நூற்றாண்டின் ஆகசிறந்த வழிகாட்டி பெரியார்.  அவரது கடவுள் மறுப்பு கொள்கையும் என்பது மூடநம்பிக்கையின் மீதிருந்த கண்மூடித்தனமான நம்பிக்கையின் சாட்டையடியாகும்.4000 ஆண்டு பயத்தை பெரியாரின் கருத்துக்கள் அசைக்க செய்தாலும், பயத்தை போக்க முடியவில்லை. தனி மனிதரது பேச்சு 4000 ஆண்டுகள் பயத்திலிருந்த கூட்டத்தை விழித்தெழ செய்யவில்லை. ஏனெனில் பயம் மனிதனின் ரத்தத்தோடு கலந்துவிட்டது.பெரியாரது காலத்திற்குப்பின் அவரது கருத்துக்கள் அரசியலாகப்பட்டு வலுவிழந்துவிட்டது.
      விவேகானந்தரும் கடவுளும் மதமும்மனித முன்னேற்றத்திற்கு ஆன்மிகம் என்பது ஒரு தேவையாகிவிட்டது. இங்கு மூடநம்பிக்கை பரிகாரம் பலியிடுதல், சடங்கு, சம்ப்ரதாயம்  போன்றவற்றை தவிர்த்து பார்த்தால் அதன் வளர்ச்சி என்பது இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது.
பகுத்தறிவு  என்பது  எது நல்லது கெட்டது என்று ஆராயும்நிலை. இங்கு எது நல்லது எது கெட்டது என்பது விவாதத்திற்குறியது.மதங்களை கடந்து தியானம் என்பது மனித வாழ்வின் மேம்பட்ட நிலையாகும்.விவேகனந்தர்  மனித முன்னேற்றத்திற்கு ஆன்மீகத்தை ஒரு படிநிலையாக கொண்டு செயல்பட்டார்.
 இறுதியாக
 மனிதனின் பயம் கடவுளைக்கொண்டு வந்தது, கடவுள் பெயரில் பயம் மீண்டும்  மனிதனுக்குள்  வந்தது . கடவுள் இல்லா நிலையும்  மனிதனுக்கு பயத்தை தர தான் செய்துள்ளது. கடவுள் உங்கள் முன் வந்தால் ஏற்படும் பயத்தைவிட பேய்  என்று கூறும்போது வரும் பயமே மனித இனத்தின் அடிப்படை மூலமாகும். ஆக பிறக்கும்போது வாழ வேண்டும் என்ற பயத்தில் ஏற்படும் அழுகை முதல்கொண்டு இறக்கும்போது ஏற்படுகிற பயமே வாழ்கை. இதற்கு நடுவில் உள்ள கடவுள் சாதி போன்றவை நான் பயமில்லாதவன் என காட்டிகொள்ள  நம்மால் உருவக்கபாட்டவையே.பயத்தை வென்றுவிடக்கூடிய தன்னம்பிக்கையே வாழ்வின் அர்த்தமாகும். இங்கு தன்னம்பிக்கை என்பது ஒருவரது நல்லசிந்தனை, நல்ல செயல்பாடு,நல்ல உழைப்பு , நல்ல உணவு, நல்ல தியானம் போன்றவற்றின் மூலம் பெற முடியும் என எண்ணுகிறேன்https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif இக்கட்டுரையில் மாற்று கருத்து இருப்பின் வரவேற்கப்படுகிறது 

Tuesday, March 1, 2016

Railway Exam 2016


Exam Pattern:
The Railway Exam 2016 will be conduct computer based online test

               Section                               Questions        
  1. General Awareness                            25
  2. General science                                 25
  3. General Intelligence & Reasoning      25
  4. Arithmetic                                            25

         Total Marks ...................................100       
         Exam Duration...............................90 MINUTES(1.30 hours)


Negative Mark of 0.33 would be deducted for each wrong answer.


Syllabus and Topics:

General Awareness: Expected 25 questions from this section. This section covered topics are given below
  • .     General Awareness Questions
  • ·         Indian History
  • ·         Indian Constitutions and Polity
  • ·         Geography
  • ·         Economics and Finance
  • ·         Basic Computer
  • ·         Books and Authors
  • ·         Abbreviations
  • ·         Static GK
  • ·         Current Affairs


General Science: Expected 25 Questions from this sections
  •          Physics
  •          Chemistry
  •          Biology

General Intelligence and Reasoning: Expected 25 questions from this sections. 
Reasoning Practice Sets
  • ·         Series (Number, Letter/word, Symbol)
  • ·         Missing Number
  • ·         Classification
  • ·         Word Formations
  • ·         Calendar Problems
  • ·         Cube & Dices
  • ·         Directions test
  • ·         Blood Relations
  • ·         Syllogism
  • ·         Venn Diagram etc

 Arithmetic: Its numerical ability problems, from this section expected 25 Questions.
  • ·         Simplification
  • ·         Number System
  • ·         Fraction, LCM, HCF
  • ·         Average
  • ·         Percentage
  • ·         Partnership
  • ·         Profit and Loss
  • ·         Mensuration
  • ·         Time and Work
  • ·         Time and Distance
  • ·         Work and Wages
  • ·         Ratios
  • ·         Geometry
  • ·         Square / Cube roots
  • ·         SI / CI
  • ·         Data Interpretations

*************************************************************************************